×

சிம்புவால் சிக்கலில் ‘பத்து தல’.. டப்பிக்கை முடிக்க முடியாமல் தவிக்கும் படக்குழு !

 

‘பத்து தல’ படத்தின் டப்பிங்கை முடிக்க முடியாமல் படக்குழு தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ‘ஜில்லுனு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.  இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் சிம்புவின் டப்பிங் மட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை. தற்போது சிம்பு பாங்காக் சென்றுள்ள நிலையில் அவர் வருகைக்காக படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருவதால் அங்கு வரும்படி படக்குழுவினருக்கு கூறியுள்ளார். அதனால் அங்கேயே டப்பிங்கை முடிக்கப்படுமா. இன்னும் கால தாமதம் படுத்துவாரா என குழப்பத்தில் உள்ளனர். இதனால் ‘பத்து தல‘ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.