×

‘பத்து தல’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் சம்பவம்... ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கும் ட்ரீட் ! 

 

 சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது. 

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இருக்கும். அதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ஜில்லுனு காதல், நெடுஞ்சாலை போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள கிளிம்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.