×

யூடியூப்பில் டிரெண்ட்டிங்கில் ‘பத்து தல’ டீசர்... தொடங்கியது ஏஜிஆரின் வெறியாட்டம் !

 

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டீசர் யூடிப்பில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. 

நடிகர் சிம்பு, ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஜில்லுனு காதல், நெடுஞ்சாலை போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய ஒமிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்றிருந்த வசனங்கள் படத்திற்கான உச்சபட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த டீசர் யூடியூப்பில் நெம்பர் ஒன் டிரெண்ட்டிங்கில் உள்ளது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.