“நான் சாதாரணமா வரல வேற மாதிரி….. வேற மாதிரி…….வந்துருக்கேன்”- STRன் அனல் பறந்த உரை.
சிம்புவின் நடிப்பில் தயாரான ‘பத்துதல’ படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிம்புவின் கெட்டப், அவர் ஆடிய நடனம் இவைகளை தாண்டி அவரின் அனல் பறந்த பேச்சு ரசிகர்களிடன் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் பட ஆடியோ லான்சில் அவரது குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்திருப்பதுபோல, சிம்பு பட ஆடியோ லான்சில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்பை நூறுசதவிகிதம் பூர்த்தி செய்யும் விதத்தில் சிம்புவின் பேச்சு இருந்தது.
ஆடியோ லான்சில் சிம்பு பேசியதாவது, “ நீங்க எனக்காக எவ்ளோ செஞ்சிருக்கீங்க, எவ்ளோ கூட நின்னுருக்கீங்க எல்லாமே எல்லாருக்கும் தெரியும், இதுவரைக்கும் நீங்க கஷ்டப்பட்ட நேரம் எல்லாம் முடிஞ்சிட்டு, இனிமே நான் என்ன பண்றன்னு மட்டும் பாருங்க……ஏன்னா நான் இந்த தடவை சாதாரணமா வரல வேற மாதிரி வந்துருக்கேன், விடவே மாட்டேன், உங்கள தலைகுனிய விடவே மாட்டேன். இனிமே தமிழ் சினிமா பெருமை படுற மாதிரி நடந்துப்பேன்” என உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.