×

சமந்தாவிற்கே டஃப் கொடுக்கும் சாயிஷா... 'ராவுடி' வீடியோ பாடல் அறிவிப்பு !

 

'பத்து தல' படத்தில் உருவாகியுள்ள 'ராவுடி' என்ற வீடியோ பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'பத்து தல'. ஞானவேல்ராஜா சார்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. 

இருப்பினும் அந்த படத்தை அப்படியே எடுக்காமல் 90 சதவீதம் வேறு மாதிரியாக இந்த படத்தை இயக்கியுள்ளர் இயக்குனர் கிருஷ்ணா. ஏஆர் ரகுமான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவடி' என்ற ஐட்டம் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு நடிகை சாயிஷா துள்ளலான நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.