×

 பவன் கல்யானின் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் 2வது பாடல் வெளியீடு

 

பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. 

ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்தினம் தயாரிக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் 2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வரவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் பவன் கல்யாணின் படம் 'ஹரி ஹர வீர மல்லு' . அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.  <a href=https://youtube.com/embed/W2PgMaq4Lnk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/W2PgMaq4Lnk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">


இப்பாடலுக்கு பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் மங்களி, ராகுல் சிப்லிகுஞ்ச், ரம்யா பிஹாரா, யாமினி கந்தசாலா, ஐரா உடுபி, மோகனபோகராஜு, வைஷ்ணவி கண்ணன், சுதீப் குமார் மற்றும் அருணா மேரி ஆகியோர் பாடியுள்ளனர்.