×

வலுவான போட்டியாளராக ‘கூழாங்கல்’… சர்வதேச விழாவில் நயன்தாரா படம்…

சர்வதேச விழாவில் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் வலிவான போட்டியாளராக தேர்வாகியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொந்த நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’ வரிசையாக பல படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் நல்ல கதையுடன் தரமான படங்களை இயக்கும் இளம் இயக்குனர்களை ஊக்குவித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் சார்பில் நயன் தாராவின் ‘நெற்றிக்கண்’ படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு’ காதல் என்ற படமும் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘ராக்கி’
 

சர்வதேச விழாவில் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘கூழாங்கல்’ திரைப்படம் வலிவான போட்டியாளராக தேர்வாகியுள்ளது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் சொந்த நிறுவனமான ‘ரௌடி பிக்சர்ஸ்’ வரிசையாக பல படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் நல்ல கதையுடன் தரமான படங்களை இயக்கும் இளம் இயக்குனர்களை ஊக்குவித்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் சார்பில் நயன் தாராவின் ‘நெற்றிக்கண்’ படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு’ காதல் என்ற படமும் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘ராக்கி’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது ரௌடி பிக்சர்ஸ்.

இந்நிலையில் இளம் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது சர்வதேச விழாவில் திரையிட முடிவு செய்யப்பட்டு அயலாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளது.

சர்வதேச அளவில் ஏராளமான திரைப்படங்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டாலும் இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படமாக ‘கூழாங்கல்’ கருதப்படுகிறது. ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிடும் ‘கூழாங்கல்’ படம் இந்த விழாவில் நேற்று திரையிடப்பட்டது. இதில் நல்ல விமர்சனங்களை கூழாங்கல் பெற்றுள்ளதாகவும், மற்ற படங்களைவிட வலுவான போட்டியாளராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வேஷ்டி புடவையில் பாரம்பரிய உடை அணிந்திருந்து கலந்துக்கொண்ட படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.