பெப்பர் சால்ட் லுக், ஈர்க்கும் சிரிப்பு... அஜித்தின் புது கெட்டப் வைரல்!
அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்று இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்ந்திரன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. அதில் முழுக்க வெள்ளை தாடி, வெள்ளை முடியுடன் இருந்தார் அஜித். கிட்டத்தட்ட அதன் இன்னொரு வெர்ஷனாக ‘விடாமுயற்சி’யிலும் அதே கெட்டப்பில் இருப்பதாக படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் தெரிந்தது. ஆனால், தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெப்பர் சால்ட் லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார் அஜித். இந்த லுக்கை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.