×

‘விடாமுயற்சி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் ?

 

விடாமுயற்சி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் அஜித்தின் 62வது படமாகும். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து டீசரும், சவதீகா எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆனால் அதே சமயம் இந்த படமானது பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் ரெடியாக இருப்பதாகவும் 2.24 நிமிடங்கள் கொண்ட இந்த ட்ரெய்லர் சென்சார் செய்யப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் படக்குழுவினர் சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.