ஃநெட்ப்ளிக்சில் வெளியானது 'பெருசு’ திரைப்படம்...!
Apr 11, 2025, 12:58 IST
‘பெருசு’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார்.மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பெருசு’. இப்படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள்.