இந்தியில் ரீமேக் ஆகும் ‘பெருசு’

 
vaibhav

தமிழில் வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ படத்தை இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வைபவ், நிஹாரிகா, சுனில், கருணாகரன் என பலர் நடித்த படம் ‘பெருசு’. ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டூடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இளங்கோ ராம் இயக்கி இருந்தார். மார்ச் 14-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பெருசு’ படம் மல்டிப்ளக்ஸ் திரையரங்க ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், பல்வேறு பிரபலங்களும் இதன் காமெடி காட்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்தார்கள். தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் விற்பனை ஆகியுள்ளது.  

<a href=https://youtube.com/embed/w5AcI3gKYVM?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/w5AcI3gKYVM/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
‘பெருசு’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையினை ஹன்சல் மேத்தா மற்றும் முகேஷ் ஷாப்ரா ஆகியோர் இணைந்து கைப்பற்றி இருக்கிறார்கள். இந்தியில் யார் இயக்கவுள்ளார், யார் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘பெருசு’ திரைப்படத்தின் ஓடிடி உரிமை வெளியீட்டிற்கு முன்பே விற்கப்பட்டுவிட்டது. இதனால் இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.