×

லக்கி பாஸ்கர் அமரனை சந்தித்த புகைப்படம் வைரல்

 
நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் `லக்கி பாஸ்கர்' படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த ப்லடி பெக்கர் திரைப்படங்களும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் லக்கி பாஸ்கர் மற்றும் அமரன் திரைப்படக்குழு துபாயில் ப்ரொமோஷன் பணிகளுக்காக சென்ற போது துல்கர் சல்மான் , மீனாட்சி சவுத்ரி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவர்கள் பதிவிட்ட புகைப்படத்தில் பாஸ்கர் மற்றும் சுமதி ,முகுந்த் வரதராஜனை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, இரண்டு திரைப்படங்களும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் என மீனாட்சி சவுத்ரி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.