×

அண்ணன் - தங்கை பாசம் பேசும் ‘கோவில் சிலையே’... ‘பிச்சைக்காரன் 2’ வீடியோ பாடல் வெளியீடு ! 

 
அண்ணன் - தங்கை பாசம் பேசும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி வெளியாகாது என தகவல்கள் வெளியாகியுள்ளளது. விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது.

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆன்ட்டி பிகிலி கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்.  இந்த படத்தில் மலையாள நடிகை காவ்யா தப்பார் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரீஷ் பெரடி, தேவ் கில், யோகிபாபு, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் அண்ணன் - தங்கை பாசம் குறித்து பேசும் வீடியோ பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோயில் சிலையே என தொடங்கும் அந்த பாடலை நிவாஸ் பாடியுள்ளார். அருண் பாரதி எழுதியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/4Y7uFLBPfdw?autoplay=1&mute=1&start=89><img src=https://img.youtube.com/vi/4Y7uFLBPfdw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">