×

“என்னை சுற்றி எல்லாம் தப்பவே நடக்குது” - ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பீட்சா 3 தி மம்மி’ டிரெய்லர் !

 

ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘பீட்சா 3 தி மம்மி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

இளம் நடிகரான அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீட்சா 3 தி மம்மி’. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் மூன்றாவதாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. 

இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஹாரர் விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

<a href=https://youtube.com/embed/Eqk4RtASo1k?autoplay=1&mute=1&start=95><img src=https://img.youtube.com/vi/Eqk4RtASo1k/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">