பிரபல அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது -இயக்குனர் யார் தெரியுமா ?
Jul 27, 2025, 06:00 IST
புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரின் வாழ்க்கை சினிமா படமாக தொடர்ந்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சேரன் இயக்கத்தில் உருவாகும் 'அய்யா' படத்தின் தலைப்பை வெளியிட்டு ராமதாஸிற்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் இந்தப் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாகவும், முன்னணி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
இப்படத்திற்கு அய்யா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சேரன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை படத்தில் அவரது இளம் வயது நிகழ்வுகள், டாக்டராக பணி செய்து கொண்டே பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களின் ஏழ்மை நிலையை அகற்றவும், கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும், தனி ஒதுக்கீடு பெறவும் போராட்டங்கள் நடத்தியது மற்றும் அரசியல் கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற உள்ளன .