×

50 அடி பேனர், 50 தேங்காய் உடைத்து ராயன் படத்தை கொண்டாடி தீர்த்த தனுஷ் ரசிகர்கள்

 


பா.பாண்டி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இயக்கம் இரண்டாவது திரைப்படம் ராயன். தமிழ்மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் இந்த திரைப்படம் வெளியாகியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் இவ்வாண்டின் மிக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படமாக உள்ளது.‌ குறிப்பாக இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக குணச்சித்திர நடிகர்கள் பிரகாஷ்ராஜ் ,எஸ் ஜே சூர்யா, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில்  நடித்துள்ளனர்.

இந்நிலையில் ராயன் நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொருத்தவரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள சுமார் ஐந்து-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதையொட்டி புதுச்சேரி மாநில நடிகர் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக 50வது படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டம் அதிகமாகவே காணப்பட்டது.


தியேட்டர் முன்பு  50 அடி பேனர் பிடித்து அதில் நடிகர் தனுஷ் நடித்த 50 படங்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன. அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்கள்  பேனருக்கு முன்பு கற்பூரம் ஏற்றி 50 தேங்காய்  சுற்றி உடைத்தனர்.‌ திரையரங்க வாயில் முன்பு ஆண்களுக்கு நிகராக பெண்களும் நடனம் ஆடி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.