×

“ஆசிய திரைப்பட விருது”... ஹாங்காங் சென்ற ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

 

 ஆசிய திரைப்பட விருது விழாவில் பங்கேற்பதற்காக ‘பொன்னியின் செல்வன்’ ஹாங்காங் சென்றுள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. பிரம்மாண்ட உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பல மொழிகளில் வெளியான இப்படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரம் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே கெளரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை ஹாங்காங்கில் நடைபெறவுள்ளது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த இசையமைப்பாளர்(ஏ.ஆர்.ரகுமான்’, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டாதரணி), சிறந்த படத்தொகுப்பு(ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு(ரவி வர்மன்). சிறந்த ஆடை வடிவமைப்பு(ஏகா லக்கானி) ஆகிய 6 பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த விருதை பெற லைக்கா புரொடக்‌ஷன்ஸி தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களின் சார்ப்பாக லைக்கா ஜி.கே.எம்.தமிழ்குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் சென்றுள்ளனர்.