சரித்திரம் படைக்குமா பொன்னியின் செல்வன்? டிவிட்டர் விமர்சனம் இதோ!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் என்று வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டர் வாசிகள் படத்தை புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இயக்குனர் மணிரத்தினத்தின் தீவிர முயற்சியின் காரணமாக தற்போது படமாக மாறி உள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய், திரிஷா ,பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஏற்கனவே வெளியாகிய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இன்று அதிகாலை முதலே படத்தை காண ரசிகர்கள் திரையரங்கு வாசல்களில் கூடிய நிலையில் படத்தை கண்டு விட்டு தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.