×

'பொன்னியின் செல்வன் 2' இணையத்தளத்தில் லீக்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

 

'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மணிரத்னத்தின் பிரம்மாண்ட காவியமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவல் இந்த திரைப்படமாக வெளியாகியுள்ளது.  ஏற்கனவே இப்படத்தில் முதல் பாகம் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாகம் வெளியிடப்பட்டுள்ளது. 

இன்று வெளியான பொன்னின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக  கசிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை இணையதளங்களில் சட்டமாக வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

 இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா தொடர்ந்த வழக்கில் சட்ட விரோதமாக 3888 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இணையதளங்களில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.