×

அருண்மொழி வர்மன் துதிபாடும் 'வீரா ராஜ வீரா'... 'பொன்னியின் செல்வன் 2' லிரிக்கல் வீடியோ வெளியீடு !

 

'பொன்னியன் செல்வன் 2' படத்தில் இருந்து வீரா ராஜ வீரா என்ற லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

 மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. 

அந்த வகையில் ஏற்கனவே முதல் லிரிக்கல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான வீரா ராஜ வீரா என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை ஷங்கர் மகாதேவன், சித்ரா மற்றும் ஹரிணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.‌ இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/UxXvOfLMgac?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/UxXvOfLMgac/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">