×

காஞ்சனா 4; இணையும் விஜய் பட நடிகை 

 

காஞ்சனா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்தடுத்து பாகங்களை இயக்கி நடித்து வந்தார் ராகவா லாரன்ஸ். கடைசியாக காஞ்சனா பாகம் 3 வெளியான நிலையில் தற்போது நான்காம் பாகம் உருவாகுவதாக தகவல் உலா வந்தது.இந்த நிலையில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாகவும் விரைவில் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. 


ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கிறார். மேலும் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வருகிறார்.