விஜய்யுடன் ஜனநாயகனில் நடித்த பூஜா ஹெக்டே -கைவசம் எத்தனை படங்கள் தெரியுமா ?
தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து பாலிவுட்டிலும் பிசியாக நடித்து வருபவர், பூஜா ஹெக்டே. தமிழில் ‘பீஸ்ட்’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் அவர் இணைந்துள்ள ‘ஜன நாயகன்’ என்ற படம் வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில், ‘ரன்வீர் சிங் பற்றி சொல்வது என்றால், நிறைய ருசிகரமான சம்பவங்கள் இருக்கிறது. அவரை நான் ‘பம்மி ஆன்ட்டி’ என்று அன்புடன் அழைப்பேன்.
‘சர்க்கஸ்’ என்ற படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்தபோது, ஒரு பாடலை பாடியபடியே செட்டுக்குள் நுழைந்த ரன்வீர் சிங், அங்கிருந்த அனைவரும் கேட்டுக்கொண்டதற்காக, ஒரு முழு பாடலுக்கு அதிவேகமாக நடனமாடி அசத்தினார். தன்னை சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது பழக்கத்தின் காரணமாக, அவருக்கு ‘பம்மி ஆன்ட்டி’ என்று செல்லப்பெயர் சூட்டினேன். தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா 4’ என்ற ஹாரர் காமெடி படத்திலும், துல்கர் சல்மானுடன் ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்ற காதல் கதை கொண்ட படத்திலும் நடிக்கிறேன்’ என்றார்.