×

ரஜினிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்...தலைவர் 171 அப்டேட்?!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில்,  இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கிறார்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் .தலைவர் 171 திரைப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றது. 

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் தலைவர் 171 திரைப்படம்  குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ்,  தான் இயக்கிய திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக இது இருக்கும் என்றும்,  இதனால் பொறுமையாக படத்தை கையாள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.