×

தனுஷூக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

 


இந்தியில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ராஞ்சனா. இப்படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டுக்கு நாயகனாக அறிமுகம் ஆனார். தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன் புதிய படத்தில் இணைந்தார் தனுஷ். அதே கதைக்கள தொடர்புடன் இந்தியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் என்ற இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடியோவுடன் வெளியானது. 

<a href=https://youtube.com/embed/fCZhBqz-hQU?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/fCZhBqz-hQU/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.