×

கள்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

 

ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடித்து பிவி சங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள  திரைப்படம் ‘கள்வன்’ ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ஜி. தில்லி பாபு இந்த படத்தை தயாரித்துள்ளார். பிவி சங்கர் 'கள்வன்' படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.  ஜிவி. பிரகாஷ்ஷிற்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.  'கள்வன்' படத்தில் இவர்களளோடு இணைந்து  தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி அட்வென்சர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிந்து போஸ்ட புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.

இந்நிலையில், கள்வன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார்  நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.