வேட்டையன் படத்தை பல கோடிகளுக்கு வாங்கிய பிரபல ஓடிடி தளம்
Oct 11, 2024, 16:35 IST
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட்ச் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார். படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை 90 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இதற்கு முன் வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படமும் அமேசான் பிரைம் தான் வாங்கியது. ஓடிடி ரிலீஸ் இன்னும் 1 மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது