×

‘போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்.

 

சமீபத்தில் வெளியான படங்களில் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்ற படங்களுள் ஒன்று ‘போர் தொழில்’. சரத்குமார் மற்றும் அசோக் செல்வனின் அதிரடி நடிப்பில் வெளியான இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில், க்ரைம் திரில்லர் கதைகளத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான படம் ‘போர் தொழில்’ சுமார் 6 கோடி செலவில் உருவாகி 75 கோடி வரை வசூல் சாதனை படத்த இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் வெளியாகும் என தகவல் கசிந்தது ஆனால் வெளியாகவில்லை. அதேப்போல இம்மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எந்த விதமான தகவலும் வெளியாகவில்லை. தற்போது அடுத்த மாதம் 4ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என நம்பகமான இடத்திலிருந்து  தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.