×

‘போர் தொழில்’ ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரபூர்வ  அறிவிப்பு.

 

சிறிய பட்ஜெட்டில் தயாராகி கோடிகளில் வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் ‘போர் தொழில்’. சரத்குமார் மற்றும் அசோக் செல்வனின் அதிரடி நடிப்பில் வெளியான இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில், க்ரைம் திரில்லர் கதைகளத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான போர் தொழில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்  ஏகோபித்த ஆதரவை பெற்றது. தொடர்ந்து இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் படம் கடந்த மாத துவக்கத்தில் வெளியாகும், இறுதியில் வெளியாகும், இம்மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என அடுத்தடுத்து தகவல்கள் கசிந்து அது பொய்யானது. தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் இம்மாதம் 11ஆம் தேதி சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அதிகாரப்பூர்வ தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.