×

நடிகர் பிரபாஸின் திருமணம் விரைவில் -உறவினர் சொல்லும் தகவல் 

 

நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பாகுபலி திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
பிரபாஸ் 2002-ம் ஆண்டு ஈஸ்வர் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு, வர்ஷம், சத்ரபதி, பௌர்ணமி, யோகி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பர்பெக்ட், ராகதேவா, மிர்ச்சி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த "பாகுபலி: 1மற்றும் "பாகுபலி 2: தி கன்க்ளூஷன்" திரைப்படங்கள் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், உலகளாவிய திரைப்பட ரசிகர்களையும் கவர்ந்தது. 
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். 45 வயதை கடந்த இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாதநிலையில், எப்போது திருமணம் செய்ய போகிறார்?யாரை திருமணம் செய்ய போகிறார் என்று ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
பிரபாஷின் திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், பிரபாசின் தந்தை வழி உறிவினர் அளித்துள்ள பேட்டியில் "சிவபெருமானின் ஆசி பொழியும்போது பிரபாஸ் திருமணம் செய்துகொள்வார். நாங்கள் அனைவரும் பிரபாசின் திருமணத்திற்காக முயற்சி எடுத்து வருகிறேம்
சிவபெருமானின் அருளாசியல் பிரபாசின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.