'ஹனுமன்’ இயக்குநருடன் இணையும் நடிகர் பிரபாஸ்
Feb 26, 2025, 15:56 IST
நடிகர் பிரபாஸ் – 'ஹனுமன்’ பட இயக்குநர் பிரசாந்த் வர்மா உடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஹனுமன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள்.
இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் வர்மா. இந்தக் கூட்டணி படத்தினை ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான டெஸ்ட் ஷூட் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை,