×

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பட்டியலில் பிரபாஸ் முதலிடம் !

 

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் நிறுவனம் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளைப் பற்றி அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின் படி, ஷாருக் கான், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி நடிகர் பிரபாஸ், முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படம் வெற்றி பெற்றதால், இந்த புகழ் அவருக்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


நடிகர் விஜய், இரண்டாவது இடத்திலும் ஷாருக்கான், என்.டி.ஆர், அஜித்குமார் ஆகியோர் 3, 4, 5 வது இடங்களையும் அல்லு அர்ஜுன் 6 வது இடத்தையும் மகேஷ் பாபு, சூர்யா, ராம்சரண் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர். சல்மான்கான் நடித்து இந்த வருடம் படங்கள் ஏதும் வெளியாகவில்லை என்பதால் அவர் முதல் இடங்களுக்குள் வரவில்லை என்று கூறப்படுகிறது.