×

10 கெட்டப்புகளில் மிரட்டியுள்ள பிரபுதேவா... ‘பஹிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

 

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா, 10-க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ள திரைப்படம் ‘பஹீரா’. வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தை இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார். பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறி பல கொலை செய்யும் கொலைக்காரன் என சைக்கோ திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் மார்ச் 3-ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.