×

நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா- இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்- பிரபலங்கள் வாழ்த்து!

 

நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யா- இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் திருமணம் இன்று கோலாகலமாக நடந்துள்ளது. தம்பதியை பிரபலங்கள் பலரும் நேரில் வாழ்த்தியுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு 80களின் காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகள் ஐஸ்வர்யா மார்க் ஆண்டனி பட இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனை காதலித்த நிலையில்  அவர்களது திருமணம் இன்று கோலாகலமாக நடந்துள்ளது.

இந்த திருமண விழாவுக்கு சரவணன் அருள், நடிகர் விஷால், பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.