பிரபுதேவா, வடிவேலு, நடிக்கும் படம் ‘பேங் பேங்’.-எந்த நாட்டில் ஷூட்டிங் நடக்கிறது தெரியுமா ?
கே.ஆர்.ஜி குழுமம் சார்பில் கண்ணன் ரவி பிரமாண்டமாக தயாரிக்க, சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கியுள்ள படம், ‘பேங் பேங்’. பிரபுதேவா, வடிவேலு, பப்லு பிருத்விராஜ், அனு கீர்த்தி வாஸ், யாவீ, பீட்டர் நடித்துள்ளனர். ெஹச்.சி.வேணு, விக்னேஷ் வாசு இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார். டான் பாலா அரங்கம் அமைக்க, தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ளார்.
படம் குறித்து அனு கீர்த்தி வாஸ் கூறுகையில், ‘இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. வடிவேலு, பிரபுதேவா போன்ற சாதனையாளர்களுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தோம். அங்கு படமாக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பாக இருக்கும்’ என்றார்.
கண்ணன் ரவி கூறுகையில், ‘பிரபுதேவா, சாம் ரோட்ரிகஸ் இணைந்து சொன்ன ஜாம்பி கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதனால், செலவை பற்றி கவலைப்படாமல் தயாரித்துள்ளேன். இந்தோனேசியாவிலுள்ள ஒரு தீவில் கடந்த 20 வருடங்களாக வெடிக்காத ஒரு எரிமலை, படப்பிடிப்பு நடந்தபோது திடீரென்று வெடித்ததை படமாக்கியுள்ளனர். இக்காட்சி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்’ என்றார்.