×

பிரபுதேவா- மடோனா இணைந்துள்ள புது பட டைட்டில் அப்டேட்.

 

கோலிவுட்டில் புது காம்போவாக பிரபுதேவா- மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ள படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.

டிரான்ஸ்இந்தியா மீடியா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில்  இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள, படத்தில் பிரபுதேவா- மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ளனர். காமெடி படமாக தயாராகியுள்ள  இந்த படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் யாஷிகா ஆன்ந்த், அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, ஒய்.ஜி மகேந்திரன், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், மதுசூதன்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். அதற்கான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.