×

பிரதீப் குமார் குரலில் `ஃப்ரீடம்' படத்தின் முதல் பாடல் வெளியானது

 
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார். படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். திரைப்படம் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஆகாயம் அம்புட்டயும் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை சினேகன் வரிகளில் பிரதீப் குமார் பாடியுள்ளார்.   <a href=https://youtube.com/embed/PP30YbO_Pzg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/PP30YbO_Pzg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">