×

100வது நாளை தொட்ட 'லவ் டுடே'... வாரி குவிக்கும் வசூலால் உற்சாகம் !

 

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான 'லவ் டுடே' திரைப்படம் வெற்றிக்கரமாக 100வது நாளை தொட்டுள்ளது. 

சமீபத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அஜித் காலிக், ரவீனா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.‌ தற்கால காதலை பேசிய இப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. இந்த வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்கில் வெளியாகி 100வது நாளை எட்டியுள்ளது. வெறும் 4 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 80 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த படம் வசூல் சாதனை படைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.