×

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 4வது படத்தின் டைட்டில் ரிலீஸ்...!

 

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

லவ் டுடே, டிராகன் படங்களின் வெற்றியால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இரண்டு படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்ததால் வணிக ரீதியாகவும் பெரிய இடத்திற்குச் சென்றுள்ளார். அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.