என்ன ஆச்சு!....- வனிதாவை தாக்கியது பிரதீப்பின் ஆதரவாளரா?
நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ள பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் முதலேயே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பிரதீப் ஆண்டனியால் சக பெண் போட்டியாளருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார்கள். இந்த விவகாரம் பூதாகரமாக பலரும் பிரதீபுக்கு ஆதரவாக பதிவிட்டனர். இது ஒரு புறம் இருக்க தற்போது வனிதாவை யாரோ பிரதீப்பின் ஆதரவாளர் என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பான பதிவை புகைப்படத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “என்னை கடுமையாக தாக்கியது யார் என அந்த கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப்பின் ஆதரவாளர் என கூறுகிறார். நான் பிக்பாஸ் விமர்சனத்தை முடித்து விட்டு எனது காரை பார்க் செய்துவிட்டு நடந்து வந்துகொண்டிருந்தேன் அப்போது, இருட்டில் வந்த நபர் ஒருவர் ரெட் கார்டு கொடுக்கிறீங்களா இதுல சப்போர்ட் வேற என கூறி அந்த நபர் என் முகத்தில் தாக்கினார். நள்ளிரவு 1 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது அங்கு யாருமே இல்லை. எனது சகோதரி போலீசில் புகாரளிக்க கூறினார். ஆனால் நான் அதில் நம்பிக்கை இல்லே என மறுத்துவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.