பிரசாந்த் நீல்-  ஜுனியர் என்.டி.ஆர் படத்தின் ரிலீஸ் அப்டேட்...!

 
neel

பிரசாந்த் நீல்-  ஜுனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் சுடசுட தயாராகி வருகிறது. இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக  மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.