×

இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து!

 

லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


இளையராஜா இயற்றிய மேற்கத்திய - கர்நாடக இசை கலந்த 'வேலியண்ட்' பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்று இசையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீப் உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து கூறினர்.