பிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
Aug 30, 2024, 12:05 IST
நிசாம் பஷீர் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் பிருத்விராஜ் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆடு ஜீவிதம்' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கிடையில், நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார்.