×

‘கனிமா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை பிரியா வாரியர்… வீடியோ வைரல்...!

 

‘கனிமா’ பாடலுக்கு நடிகை பிரியா வாரியர் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.  


ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் ரூ.200 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்தப்படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. சிம்ரன் நடனத்தில் ‘க்ளாசிக்’ என புகழப்படும் இந்தப் பாடலின் மீட்டுருவாக்கத்தில் நடிகை பிரியா வாரியர் நடனம் ஆடியிருந்தார். 2கே கிட்ஸ்களின் சிம்ரன் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். அந்த அளவுக்கு பாடல் கொடுத்த ‘வைப்’ பிரியா வாரியரின் நடனம் ரசிகர்களை கவர்ந்தது.