×

தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ள பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மூன்று வருடங்களாக சென்னையில் டாக்சி டிரைவராகப் பணியாற்றிய இவர் ஊரடங்கால் சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார். அதையடுத்து தற்போது அவருக்கு 108 அவரச ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும்
 

நடிகை பிரியங்கா சோப்ரா தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவரைப் பாராட்டியுள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண் தமிழகத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மூன்று வருடங்களாக சென்னையில் டாக்சி டிரைவராகப் பணியாற்றிய இவர் ஊரடங்கால் சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றுள்ளார். அதையடுத்து தற்போது அவருக்கு 108 அவரச ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணி வழங்கப்பட்டுள்ளது.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா சோப்ரா தொடர்ந்து சமூக அக்கறையுள்ள நபர்களைக் குறிப்பிட்டு பாராட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவரைப் பாராட்டியுள்ளார் பிரியங்கா.

இந்தியாவில் சென்னையைச் சேர்ந்த எம்.வீரலட்சுமி 108 ஆம்புலன்ஸ் ஓட்டும் தமிழகத்தின் முதல் பெண்மணி ஆவார். அவர் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் டிப்ளோமா படித்துள்ளார். கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றவர் மற்றும் தனது குடும்பத்திற்கு பொருளாதார வகையில் உதவுவதற்காக வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.” என்று தெரிவித்து பாராட்டியுள்ளார்.