×

துப்பாக்கியுடன் மிரட்டும் பிரியங்கா மோகன்... ‘கேப்டன் மில்லர்’ மாஸ் அப்டேட்

 
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நடிகை பிரியங்கா அருள் மோகன் நிறைவு செய்துள்ளார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது. 

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடிகை பிரியங்கா அருள் மோகன் நிறைவு செய்துள்ளார். இதையொட்டி இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.