×

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய்குமார்

 

குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார். கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர். லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கிய இவர், அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளதாக கூறப்பட்டது. ஜி ஸ்குவேட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவித்தும் உள்ளார். 

இந்நிலையில், தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக விஜய் குமாரின் படத்தை அவர் தயாரிக்கிறார். இவர் உறியடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இன்று வெளியாக உள்ளது.