×

அமேசான், நெட்பிலிக்ஸிற்கு சவால் விடத் தயாராகும் தமிழ் ஓடிடி தளம்!

ஊரடங்கு நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அனைவரும் ஓடிடி பக்கம் போய் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வருங்காலத்தில் ஓடிடி தான் சினிமாவின் எதிர்காலம் என்ற பேச்சுக்கள் கூட எழ ஆரம்பித்துவிட்டன. டிஸ்னி ஹாட்ஸ்டார் , அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வருணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை தமிழர்கள் அதிகம் பயப்படுவதாக கூறப்படுகிறது. தமிழர்கள் சினிமா மீது
 

ஊரடங்கு நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் அனைவரும் ஓடிடி பக்கம் போய் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். வருங்காலத்தில் ஓடிடி தான் சினிமாவின் எதிர்காலம் என்ற பேச்சுக்கள் கூட எழ ஆரம்பித்துவிட்டன.

டிஸ்னி ஹாட்ஸ்டார் , அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ‘ஓவர் தி டாப்’ என வருணிக்கப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் திரையிடல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றன. மில்லியன் டாலர்களில் வருவாய் ஈட்டும் இந்த வெளிநாட்டுத் தளங்களை தமிழர்கள் அதிகம் பயப்படுவதாக கூறப்படுகிறது. தமிழர்கள் சினிமா மீது அதிக காதல் கொண்டவர்கள் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அதனால் தான் சினிமா தொழில் தமிழகத்தில் ஆண்டுக்கு குறைந்தது 1500 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் பொழுதுபோக்குச் சந்தையாக இருந்து வருகிறது.

 
தற்போது தமிழிழும் ஒரு ஓடிடி தளம் உருவானால் நன்றாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக திருக்குமரன் எண்டெர்டெயிண்மெண்ட் பட நிறுவனத்தின் அதிபர், தயாரிப்பாளர், இயக்குநர் சி.வி.குமார் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் தமிழகத்திலிருந்து முதல் சர்வதேச ஓடிடி தளத்தை வரும் 8-ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் ‘அட்டக்கத்தி’, ‘பிட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘முண்டாசுபட்டி’, ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இன்று நேற்று நாளை’, ‘இறுதி சுற்று’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘அதே கண்கள்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அதேபோல, அவர் இயக்கிய ‘மாயவன்’, ‘கேங்கஸ் ஆஃப் மெட்ராஸ்’ படங்களின் கதைக் களமும் அவற்றை அவர் தந்த விதமும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றன.
தற்போது அவர் ‘ஓடிடி’ துறையில் கால் பதிப்பது தமிழர்களுக்குப் பெருமை என்று பலர் தெரிவித்து வருகின்றனர்.