×

மனைவிக்கு வளைக்காப்பு செய்து அழகு பார்த்த பிரபல தயாரிப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள் !

 

 தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தனது மனைவிக்கு வளைக்காப்பு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஆர்.கே.சுரேஷ். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதோடு பலமொழி  திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதனால் வெற்றிக்கரமான தயாரிப்பாளராக இருந்து வருகிறார். 

பிசியான தயாரிப்பாளராக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் நடிகராக உருவெடுத்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கதாநாயகனை விட வில்லனாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விசித்திரன்’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து கோட்டை முனி உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மது என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதையொட்டி வளைக்காப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.