‘மேக்கிங் ஆப் வந்தியத்தேவன்’ – வீடியோ வெளியிட்ட படக்குழு.
நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்திய தேவனாக எப்படி மாறினார் என்பதை விளக்கும்வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன்’ அமரர் கல்கியின் வரலாற்று காவியமான இந்த புத்தகம், தற்போது அதே பெயரின் இயக்குந்ர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. அதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 2022 அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இரண்டாம பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான புரொமோஷனிற்கு படக்குழு தயாராகி வருகிறனர்.
அந்த வகையில் படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடல் குறித்த அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியானது. இன்று படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஒன்றான வந்தியதேவன் கதாப்பாத்திரமாக நடிகர் கார்த்தி எப்படி மாறுகிறார் என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதில் வந்தியதேவனிற்கான சிகை, உடை, அணிகலன்கள் ஆகியவை எப்படி தேர்வு செய்யப்பட்டது. கார்த்தி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் எப்படி நடித்தார் என்பது வீடியோவில் இடம்பெற்றுள்ளது.