×

ஜன.11 முதல் ‘புஷ்பா 2’  ‘ரீலோடட் வெர்ஷaன்’  

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சியை சேர்த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த கூடுதல் காட்சிகளுடன் படத்தை வரும் 11-ம் தேதி முதல் திரையரங்குகளில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ரசிகர்களின் ஆதரவினால் இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கூடுதலா 20 நிமிடங்கள் காட்சிகளை படக்குழு சேர்த்துள்ளது. ‘ரீலோடட் வெர்ஷன்’ என இதை படக்குழு புரமோட் செய்து வருகிறது.

 


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத், பின்னணி இசைக்கு சாம் சிஎஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டுமே வெளியாகி இருக்கிறது